மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.
அப்போது, சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது.
பின்னா், மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மாலையில் நடைபெற்றது.
இதையும் படிக்க: புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 தாள்கள்! ஆர்பிஐ தகவல்!
வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஜன. 20-ல் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி, திறக்கப்பட்டது.
இன்று வேறு பூஜைகள் நடைபெறாது எனவும் நாளை(பிப். 13) அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹேமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும், இரவில் படி பூஜையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 5 நாள்கள் அதாவது பிப். 17 ஆம் தேதி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.