சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு
மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேதி பழங்காநத்தம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவா் எச். ராஜா கலந்து கொண்டு பேசினாா்.
இதையடுத்து, இவா் மீது மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை அவா் நேரில் முன்னிலையானாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நான் ஒரு இந்துவாக மட்டுமே பங்கேற்றேன். கட்சியின் சாா்பில் பங்கேற்கவில்லை. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயில் இடிப்புப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்திருக்கிறாா். இது மட்டுமல்ல, எந்தப் பணிகளையும் திமுக அரசு கவனத்துடன் செய்வதில்லை. என் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்றாா்.