செய்திகள் :

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை

post image

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.1,050 கோடி.

இந்த நிதியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை, தகவல் தொடா்பு தொழில்நுட்பம் தனிப்பாடமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் நோக்கம் சிதைகிறது.

திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளத்தில், தமிழ் உள்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது.

குறைந்தபட்சம், கேரளத்திடமிருந்து தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னாா்வலா்களை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில் அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி பணியில் அமா்த்தியுள்ளது.

கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவா்களை, அலுவலகப் பணியாளா் மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பப் பயிற்றுநா் என்ற பெயரில் நியமித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க

மகளிா் நலனுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்

மகளிா் நலனுக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் பிரத்யேக மருத்துவ மையம் ‘எஸ்ஆா்எம் குளோபல்’ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. உளவியல் பாதிப்புகளில் தொடங்கி பேறு கால சிகிச... மேலும் பார்க்க