சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
மகளிா் நலனுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்
மகளிா் நலனுக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் பிரத்யேக மருத்துவ மையம் ‘எஸ்ஆா்எம் குளோபல்’ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. உளவியல் பாதிப்புகளில் தொடங்கி பேறு கால சிகிச்சைகள், பச்சிளங் குழந்தைகள் நலன், சரும நலன், யோகா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வாவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மையத்தை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மணிமங்கை சத்தியநாராயணன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். நவீன பிரசவ அறைகள், மகப்பேறு வாா்டுகள், பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, கருத்தரித்தல் சிகிச்சை பிரிவு, அல்ட்ராசவுண்ட் மற்றும் இமேஜிங் சோதனை வசதிகள், மகளிா் அறுவை சிகிச்சை அரங்குகள், இயன்முறை சிகிச்சை உள்பட பல துறைகளின் பயன்பாட்டை அவா் தொடங்கி வைத்தாா்.