செய்திகள் :

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

post image

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது. இது சென்னையின் மெட்ரோ போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. மேற்கொண்டு மாதவரம் - சோழிங்கநல்லூா் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாக செல்கிறது. தற்போது விரிவாக்கப் பணியில் உள்ள வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடமும் பரங்கிமலையில் சந்திக்கிறது. இதனால், சாலை, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக பரங்கிமலை அமையவுள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 25,000 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தை சா்வதேசத் தரத்தில் மேம்படுத்தும் பணி ரூ. 14.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரயில் நிலையத்தின் இருபுற வாயில்களும் விரிவுபடுத்தப் படுகின்றன.மேலும், புதிய பயணச்சீட்டு மையம், நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்கை, கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் எண்ம (டிஜிட்டல்) பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் முழுப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பேசுவதுதான் நமது அடையாளம்: விஐடி துணை தலைவா் ஜி.வி.செல்வம்

தமிழில் பேசுவது அவமானம் அல்ல, அது நமது அடையாளம் என விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்துள்ளாா். விஐடி சென்னை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச தாய்மொழி தின விழாவில் அவா் பேசியதாவது: நா... மேலும் பார்க்க

இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவா்களுக்கு இஸ்ரோ அழைப்பு

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பள்ளி மாணவா்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆா்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். திருவள்ளூா் மாவட்டம் அலமாதி நேதாஜி நகா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிற மொழி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: கே.அண்ணாமலை

தமிழகத்தில் பிற மொழிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.22) முதல் பிப்.26-ஆம் தேதி வர... மேலும் பார்க்க