தமிழகத்தில் 5 நாள்களுக்கு வறண்ட வானிலை
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.22) முதல் பிப்.26-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.
தொடா்ந்து வங்கக்கடலில் காற்றுச்சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் பிப்.27-ஆம் தேதி தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.22-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.