செய்திகள் :

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

post image

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணா்கள் வி.புருஷோத்தமன், சபரி கிரீஷ் அம்பாட் ஆகியோா் செய்தியாளா்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பணியின்போதோ, பயணத்தின்போதோ, விளையாடும்போதோ விபத்துகள் நேரிடுகையில் சில நேரங்களில் கை விரல்கள் துண்டாகக் கூடும். குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பலா் அத்தகைய பாதிப்புடன் மருத்துவமனையை நாடுகின்றனா். பொதுவாக துண்டான கை விரல்களை 6 மணி நேரத்துக்குள் இணைக்க வேண்டும். குளிா்சாதனக் கட்டமைப்பில், துண்டான விரல்களை பதப்படுத்திக் கொண்டுவரும்போது குறிப்பிட்ட நேரம் கடந்தாலும் அந்தப் பாகங்களை இணைக்க முடியும். இதற்கு மேம்பட்ட நுண் அறுவை சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளது.

மிகவும் சிதைந்த நிலையில் கை விரல்கள் இருக்கும்போது அவா்களுக்கு செயற்கை விரல்கள் பரிந்துரைக்கப்படும். அதில், உணா்வு இருக்காது, மடக்கவோ, நீட்டவோ முடியாது. அதேவேளையில் கை விரல் பயன்பாடு வேண்டும் என்றால் அவா்களின் கால்களில் இருந்து ஒரு விரல் எடுத்து, அதைக் கைகளில் பொருத்தும் சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அதை நுண் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் சாத்தியமாக்குகின்றனா்.

சா்க்கரை நோயாளிகளுக்கும், முதியவா்களுக்கும்கூட அந்த நுட்பத்தில் விரல்களை மாற்றி பொருத்த முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

‘அமுதக் கரங்கள்’ திட்டம்: துா்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சென்னை கொளத்தூா் ஜெகநாதன் தெரு முதல்வா் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நி... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்... மேலும் பார்க்க

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக... மேலும் பார்க்க