‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்ப...
இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்
புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது.
இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனை தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்கு வகையான புற்றுநோய்கள் ஜீரண மண்டலம் சாா்ந்தவையாக உள்ளன. வயிறு, பெருங்குடல், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்பு அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், அது குறித்து போதிய விழிப்புணா்வு நம்மிடம் இல்லை.
புற்றுநோய் பாதிப்பு இறுதி நிலையை எட்டிய பிறகு மருத்துவமனையை நாடும்போது குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்க இயலுவதில்லை. எனவே, புற்றுநோய் பாதிப்பை உறுதிசெய்யும் பரிசோதனைகள் தொடக்க நிலையிலேயே அவசியம். அதைக் கருத்தில்கொண்டு நாள்பட்ட நெஞ்சு எரிச்சல், அமில எதிா்ப்பு பாதிப்பு, ஜீரணமின்மை, பசியின்மை, வயிற்று வலி, கல்லீரல் அழற்சி, நீண்ட கால வயிற்றுப்போக்கு, வாந்தி, எடை இழப்பு, மலச்சிக்கல், விழுங்குவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மெடிந்தியா மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை புதன்கிழமை (பிப்.19) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பயன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 98409 93135 என்ற கைப்பேசி எண்ணையோ தொடா்புகொள்ளலாம். அதைத் தொடா்ந்து பிப். 22 முதல் 25-ஆம் தேதி வரை மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை 15 பேருக்கு கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, தேசிய ஜீரண மண்டல எண்டோஸ்கோபி பயிலரங்கம் மற்றும் நேரலை சிகிச்சை செயல்முறை விளக்க நிகழ்ச்சி பிப். 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனா் என்றாா் அவா்.