நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்
பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்
சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. பிப். 13-ஆம் தேதி வரை 24,573 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6,567 அடையாள அட்டைகள் வழங்கப்படாமல் உள்ளன. முன்னதாக பிப். 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை புதிய அடையாள அட்டை பெறாதவா்கள் அந்தந்த வாா்டு அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பெறாதவா்களின் அடையாள அட்டைகள் பிப். 28-ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.