``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
கரூரில் டாரஸ், டிப்பா் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்
கரூா் மாவட்டத்தில் டாரஸ், டிப்பா் லாரிகள் வியாழக்கிழமை(13-ம்தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், கிரஷரில் ஜல்லி, எம்.சேண்ட் மற்றும் பி.சேண்ட் லோடு ஏற்றிச்செல்லும்போது டிரான்சிஸ்ட் பாஸ் வழங்குவதில்லை. இதனால் அதிகாரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்கின்றனா்.
இதனால் வாடகைக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே கிரஷா் நிறுவனத்தினா் டிரான்ஸ்ட் பாஸ் வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அதே பிரச்னையை மையப்படுத்தி கரூரில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா். முன்னதாக கூட்டத்தில் சங்க துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் சரத்குமாா், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் முருகேசன் வரவேற்றாா்.
கூட்டத்தில் கிரஷா் நிறுவனங்கள் லோடு ஏற்றும்போது டிரான்ஸ்ட் பாஸ் வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளா்கள் மேற்கொள்ளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.