செய்திகள் :

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

post image

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன.

கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி என்பவர் ரயில் பாதையை கடந்து வாய்க்காலுக்கு செல்லும்போது தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை பார்த்துள்ளார்.

உடனடியாக தண்டாவாளத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : ரூ.200 நோட்டும் திரும்பப் பெறப்படுமா? என்ன சொல்கிறது ஆர்பிஐ?

அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் விரைவு ரயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா - வேளாங்கன்னி விரைவு மாயனூர் ரயில் நிலையத்திலும், கரூர் - திருச்சி பயணிகள் ரயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.

சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக தண்டாவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்

கடந்த மாதம் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.17 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுதிறனாளி பயனாளிகள் 8 நபா்களுக்கு ரூ. ரூ.2.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது!

தும்பிவாடி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா். சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, தும்பிவாடி ஐந்து ரோடு பகுதியில் சட்டவிரோதமாக, மது விற்பனை நடப்பதாக ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநா் ‘போக்ஸோ’வில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா் கிராமத்தில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது ச... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு!

கரூா் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கனவுகளின் கலைச்சங்கமம் எனும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரியில் மாணவ, மாணவிகளு... மேலும் பார்க்க

பல மாதமாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி- தரகம்பட்டி சாலை!

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாத வேப்பங்குடி-தரகம்பட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் மாவட்டம் வரவணை ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குடி கிராம... மேலும் பார்க்க