21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் ராகுல் காந்தி, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க : லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?
இரவு சென்னையில் தங்கிவிட்டு, நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தில்லி செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், வாரங்கல்லில் இருந்து ரயிலில் சென்னை வரை பயணிப்பது பாதுகாப்பற்றதாக அவரது அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாரங்கல்லில் இருந்து நேரடியாக ராகுல் காந்தி தில்லி திரும்பும் வகையில் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் வருகை செய்தியை அறிந்து, அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் காலைமுதல் ஆயத்தமான நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.