சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!
மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் பேட்டியளித்துள்ளார்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறுகையில் "விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், விஜயகாந்த் 2005 இல் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்று 12 சதவீத வாக்குகளை பெற்று பின்னரே கூட்டணி வைத்தார்.
விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம், அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம்.
தற்போதைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என்று கூற முடியாது. தேர்தலுக்கு முன்னர் எதுவும் மாறலாம், சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடு மாறும், அதிமுகவுக்குள் நிலவும் பிரச்னைகளை சரி செய்வார்கள். அனைவரையும் ஒன்றிணைப்பது தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பார்கள். பொது செயலாளர் என்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னார்கள். போட்டியிட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என்று கூறினார்.