`எனக்கு இதுல செலவு கம்மிதான்...' - தினமும் விமானத்தில் வேலைக்குச் செல்லும் இந்தி...
ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலமாக வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் தொழிற்சாலைகள் அமையும் எனவும் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
முன்னதாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.