செய்திகள் :

`எனக்கு இதுல செலவு கம்மிதான்...' - தினமும் விமானத்தில் வேலைக்குச் செல்லும் இந்திய வம்சாவளி பெண்

post image
அன்றாட வேலைக்கு பேருந்து, ஆட்டோ, பைக், காரில் சென்றுவருவதற்கே, அப்பாடா என ஒருகணம் பெருமூச்சு விடும் நம்மில், யாராவது தினமும் விமானத்தில் வேலைக்கு செல்வார்கள் என்று நினைத்திருக்கக் கூட மாட்டோம். ஆனால், ஒரு பெண்மணி தினமும் விமானத்தில் வேலைக்குச் சென்று வருகிறார் என்பதை நம்ப முடிகிறதா?

மலேசியாவைச் சேர்ந்த ரேச்சல் கவுர்தான் அந்தப் பெண். இந்தியா வம்சாவளியான இவர், ஏர் ஏசியா (AIr Asia) நிறுவனத்தின் நிதித் துறையில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். ஆரம்பத்தில் தனது நிறுவனம் இருக்கும் இடமான குலா லம்பூரில் (Kuala Lumpur) வீடு எடுத்துத் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

விமானம் - வெளிநாடு

இருப்பினும், இவரது வீடு இருக்கும் பினாங்கிற்கும் (Penang), அலுவலகம் இருக்கும் குலா லம்பூருக்கும் இடையிலான 353 கி.மீ தொலைவு, தன் குழந்தைகளை அவர் மிஸ் பண்ணுவதை உணர்த்தியது. அதனால், வேலையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய அவர் கண்டுபிடித்த வழிதான் தினமும், பினாங்கிலிருந்து குலா லம்பூருக்கு விமானத்தில் வேலைக்குச் சென்று வருவது.

ஆங்கில ஊடகத்துடன் இதுபற்றி பகிர்ந்த ரேச்சல் கவுர், ''எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவருக்கு 12 வயது, இன்னொருவருக்கு 11 வயது. இருவரும் வளர்ந்துவரும் இந்த நேரத்தில் ஒரு தாயாக அவர்களுடன் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதனால், வாரத்தில் 5 நாள்கள் இப்படி வேலைக்குச் சென்று வருகிறேன். இதனால், என்னுடைய குழந்தைகளோடு தினமும் நேரத்தை செலவிட முடிகிறது." என்று கூறியவர், இதை நீண்ட காலமாகவெல்லாம் செய்யவில்லையெனவும், 2024-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துதான் இப்படிச் சென்றுவருவதகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறு சென்றுவருவதன் மூலம், தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சிறப்பாக பேலன்ஸ் ஆகிறது என்றும் அவர் கூறினார்.

ரேச்சல் கவுர்

இவ்வாறு விமானத்தில் வேலைக்கு சென்று வருவதற்கு, தினமும் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகி, 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, 5.55 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்து, விமானத்தில் ஏறுவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்ததும் ஆஃபீஸ்தான் நெக்ஸ்ட் ஸ்டாப். பிறகு வேலையை முடித்துவிட்டு, இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டிற்குத் திரும்பிவிடுவாராம்.

'அதெல்லாம் சரி... விமானதுத்துல போயிட்டு வாரங்களே காசு என்ன ஆகுறது' என்பது தானே உங்கள் மைண்ட் வாய்ஸ். இதுபற்றி பேசிய ரேச்சல் கவுர், ``ஆரம்பத்தில் குலா லம்பூரில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது மாதம் ரூ. 41,000 செலவானது. ஆனால், இப்போது பயணச் செலவு ரூ. 27,000 மட்டும் தான் ஆகிறது. அதுமட்டுமல்லாமல், வர்க் ஃப்ரம் ஹோம் எடுத்து வேலை பார்ப்பதற்கு, தினமும் பயணித்து சென்று மனிதர்களுடன் வேலை பார்ப்பது நன்றாக உள்ளது" என்று கூறினார்.

வேலைக்காக நீங்கள் இப்படி தினமும் பயணம் செய்வீர்களா மக்களே...?!

KM Cherian: சென்ற இடமெல்லாம் சிறப்பு.. இந்தியாவின் முதல் பைபாஸ் சர்ஜன் `பத்மஶ்ரீ செரியன்'

50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் முக்கிய பங்காற்றியவர்... பல முன்னோடி இதய அறுவை சிகிச்சைகள் மூலம் உலகின் கண்களை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் கே.எம்.செரியன்.1942-ம் ஆண்டு, கேரளா செங்கனூரில... மேலும் பார்க்க

`ஒரே வெட்டவெளியா இருக்கு...' - பிரெஞ்ச் சைக்கிளிஸ்ட்டுகளை நட்ட நடுரோட்டில் விட்ட கூகுள் மேப்

'சந்துக்குள்ள போகணுமா...பொந்துக்குள்ள போகணுமா?', 'ஏன் ஆண்டிப்பட்டில இருந்து அமெரிக்க போகணுமா?' - இந்த 'டெக்' காலத்தில் நம் ஆட்கள் மிகவும்... பெரிதும் நம்பியிருப்பது 'கூகுள் மேப்'-ஐ தான்.`நடுகாட்டில் க... மேலும் பார்க்க

Only Veg: `அசைவம் தடை செய்யப்பட்ட 6 இந்திய நகரங்கள்..' எந்தெந்த நகரங்கள் தெரியுமா?!

'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தியா. மொழி, கலாச்சாரம் மாறுப்பட்டிருப்பதுப்போல, இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவுகள் வேறுபடுகின்றன. அதிலும் சில நகரங்களில் மத மற்றும் ஆன்மீக நம்பி... மேலும் பார்க்க

ஒரு சொல்; ஒரு படம்; ஒரு சம்பவம்... கண்களை கலங்க வைக்கும் சில நிமிடங்கள்! | My Vikatan

2024 முடிந்து 2025 ம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. இப்படியும் கூட மனங்களா என யோசிக்க வைக்கும் சில விநோதமான வாழ்வியல் நிமிடங்களை இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.அனுபவிக்க தயாராக வாருங்கள் செல்வோம்..அன்றைய... மேலும் பார்க்க

Hindenburg: 'ஆம்புலன்ஸ் டிரைவர் முதல் ஹிண்டன்பர்க் சாம்ராஜ்யம் வரை...' - யார் இந்த நேட் ஆண்டர்சன்?!

நேட் ஆண்டர்சன் - பல பெரும் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு கிலியாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு பின்னால் இருந்த ஒற்றை ஆள்.ஈரோஸ், நிக்கோலா, அதானி...என மோசடி செய்யும் நிறுவனங்களின் முகத்திரையை கிழித்... மேலும் பார்க்க

Hindenburg: `எலான் மஸ்க் டு அதானி' -ஹிண்டன்பர்க் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மோசடிகள்!

'நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்லடா...நான் அடிச்ச 10 பேரும் டான் தான்!' என்கிற கே.ஜி.எஃப் மாஸ் டயலாக் யாருக்கு பொருந்துமோ, இல்லையோ...நிச்சயம் 'ஹிண்டன்பர்க் நிறுவன'த்திற்கு செட் ஆகும்.ஹிண்டன்பர்... மேலும் பார்க்க