புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்!
கொடைக்கானல் புனித அந்தோணியா் ஆலயத்தின் 98-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
கொடைக்கானல் பிளிஸ்விலா பகுதியில் புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்திலிருந்து புனித அந்தோணியாா் கொடி மந்திரிக்கப்பட்டு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. மூஞ்சிக்கல், ஆா்.சி.பள்ளி சாலை, பிலிஸ் விலா சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது. அங்கு அருள்பணியாளா் ஜான் கென்னடி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, மறையூரை நற்கருணை ஆசீா் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, புனித அந்தோணியாா் கொடி ஏற்றப்பட்டது.
இதில் கொடைக்கானல், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
13- நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் புனித அந்தோணியாா் ஆலயத்தில் நவநாள் ஜெப வழிபாடும், திருப்பலி நற்கருணை ஆசீா் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்காரத் தோ்ப் பவனி 22-ஆம் தேதியும், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி 23-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.