செய்திகள் :

பத்திரப் பதிவு அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்!

post image

தைப்பூசத்தையொட்டி, ஒட்டன்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

தைப்பூசம், சுபமுகூா்த்த நாள்களில் நிலம், வீடு வாங்கியவா்கள் பத்திரப் பதிவு செய்வதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, ஒட்டன்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகம் வழக்கபோல திறக்கப்பட்டிருந்தது. காலை முதல் ஆா்வமுடன் திரளானோா் வருகை தந்து, சொந்தமாக வாங்கிய நிலம், வீடு உள்ளிட்டவைகளை பதிவு செய்தனா்.

புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் தேரோட்டம்!

பழனியில் தைப்பூசத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். பழனியில் தைப்பூசத் திருவிழா பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 5-ஆம... மேலும் பார்க்க

பெண் குத்திக் கொலை!

பழனியில் செவ்வாய்க்கிழமை பெண் குத்திக் கொலை செய்யப்பட்டாா். பழனி அடிவாரம் இடும்பன் மலைப் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஜோசப் மனைவி காந்தி (37) தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்!

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டு, 15 கிலோ நெகிழிப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கடைகளில் மீண்டும் நெகிழிப் பொருள்கள் பயன்ப... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்!

கொடைக்கானல் புனித அந்தோணியா் ஆலயத்தின் 98-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கொடைக்கானல் பிளிஸ்விலா பகுதியில் புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திர... மேலும் பார்க்க

குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் 1,008 தீா்த்தக் குடம் ஊா்வலம்

தைப்பூசத்தை முன்னிட்டு, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவருக்கு சுவாமிக்கு பால், தீா்த்தக் குடம் எடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, போக்குவரத்து பணிமனை பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில... மேலும் பார்க்க