புணேவில் மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய் பாதிப்பு! பலி எண்ணிக்கை - 7
Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?!
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கனடா மீது வரி, மெக்சிகோ மீது வரி, சீனா மீது வரி... என்று வரிகளை அடுக்கிக்கொண்டு போனார் ட்ரம்ப்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இது தொடர்ந்தால், இந்தியா மீது அமெரிக்கா 100 சதவிகித வரியை விதிக்கும்" என்று கூறியிருந்தார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்.
இந்த நிலையில், Nomura என்னும் உலக அளவிலான நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது இந்தியா அமெரிக்காவுடன் எந்த வர்த்தக பிரச்னையில் ஈடுபடவும் விரும்பவில்லை.
தற்போது தாக்கலான இந்திய பட்ஜெட்டில், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளித்துறை ஆகியவற்றில் இறக்குமதி வரியை குறைத்துள்ளது இந்திய அரசு.
ஆடம்பர வாகனங்கள், சோலார் செல்கள், ரசாயனம் ஆகியவற்றின் இறக்குமதி வரி மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிட்டத்தட்ட 30 பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கவும், அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு மற்றும் எனர்ஜி சம்பந்தமான விஷயங்களை மேலும் வாங்கவும் இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா அமெரிக்காவின் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது.
இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் டாப் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இந்தியா ஏற்றுமதிகளில் 18 சதவிகிதம் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. இது இந்திய ஜி.டி.பி-யில் 2.2 சதவிகிதத்தை கொண்டுள்ளது" என்று கூறுப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில், இந்தியா - அமெரிக்காவின் வர்த்தக உறவு அதிகரித்து வருகிறது. இப்போது, அமெரிக்கா இந்திய பொருட்களின் மீது அதிக வரி விதித்தால், உறவில் விரிசல் விழலாம்... இந்தியாவின் ஏற்றுமதிகள் பாதிக்கும். முக்கியமாக, இந்த அதிக வரி விதிப்பு, ஏற்றுமதி பாதிப்புகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.