ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்
Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?
கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி முதலே உலகெங்கும் இருக்கும் தங்களின் ஊழியர்களுக்கு பணிநீக்க மெயில்களை மெட்டா அனுப்பி வருவதாக மெட்டா ஊழியர்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/d2bef72e-2b02-43be-a743-b04677f133eb/1b.png)
குறைந்த செயல்திறனை வெளிப்படுத்துதல், நிறுவனத்தில் புதிய மாறுபாடுகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் ஊழியர்கள் பணி நீக்க செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணிநீக்கம் பல கட்டங்களாக பிப் 11ம் தேதி முதல் பிப் 18ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் முடிந்தபிறகு, புதிய ஊழியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மெட்டா நிறுவனம் செயற்கைத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஊழியர்களைப் புதிதாகப் பணியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும், 'AI' தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகள் செய்யப்போவதாகவும் தொழில்நுட்ப வல்லுநர் கூறுகின்றனர்.
மெட்டா, கூகுள் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐ.டி நிறுவனங்கள் பல இந்த ஆண்டு பணி நீக்க நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கப்போகின்றன என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பாக இருக்கின்றன. ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் எதையும் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது என்றும் திடீர் பணிநீக்கம், பணி மாறுதல், புதிய பணியைத் தேடுதலால் ஏற்படும் மன அழுத்தங்களை நம்பிக்கையுடன் கையாளுதல் அவசியம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.