செய்திகள் :

ADMK: ``எடப்பாடி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை..'' -செங்கோட்டையன் ஓபன் டாக்

post image
தமிழகத்தின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக இருந்துவந்த கோரிக்கையான `அத்திக்கடவு - அவிநாசி’ திட்டம் நிறைவேறியிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே இருந்த பழைய திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து ஆண்டுதோறும் 1.5 டி.எம்.சி தண்ணீரை எடுத்து அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அத்துடன், ரூ.1,490 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. விரிவான ஆய்வுப் பணிக்குப் பிறகு 2019-ல் அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அ.தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்டத்தின் 80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. ஆனால், இதன் பணிகள் முழுவதுமாக முடியக் கால தாமதமாகிவிட்டது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்

இதையடுத்து கடந்த  ஆண்டு ஆக.17ம் தேதி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்திருந்தார்.

இது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட ஆண்டு கால கோரிக்கை என்பதால், ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து நற்பெயர் வாங்க முயற்சிப்பதாகவும், 'திட்டத்தை அறித்தது ஒருவர், அதைத் திறந்து வைத்து மக்களிடம் பெயர் வாங்குபவர் வேறு ஒருவரா...' என கொந்தளித்த அ.தி.மு.க'வினர் அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று (9.2.2025) நடத்தினர்.  

செங்கோட்டையன்

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது 'அ.தி.மு.க'விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டை இது குறித்து பேசுகையில், "அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க

"சாதி வாரிக் கணக்கெடுப்பு... இல்லையெனில் தமிழ்நாடே கலவர பூமியாகும்" - அன்புமணி காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 'தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் , தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

'பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்த புதிய வருமான வரி சட்டம்..!' - எப்போது, எதற்காக வருகிறது?!

கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்த சட்டத்திற்கு... மேலும் பார்க்க

Meta: 3000 பேரை பணி நிக்கம் செய்யும் மெட்டா; AI தொழில்நுட்பம்தான் காரணமா... பின்னனி என்ன?

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனம... மேலும் பார்க்க

US penny: ``இனி புதிய பென்னி நாணயங்களை அச்சிட வேண்டாம்'' -ட்ரம்ப் சொன்ன கணக்கு... தொடரும் அதிரடி!

'இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்' - இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது. அமெரிக்காவில் 'பென்னி' என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில்... மேலும் பார்க்க

Delhi: ``முஸ்தஃபாபாத் தொகுதியின் பெயரை `ஷிவ்புரி' என மாற்றுவேன்'' -பாஜக மோகன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முஸ்தஃபாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சிங் பிஷ்ட், முஸ்தஃபாபாதை 'ஷிவ்புரி' அல்லது ஷிவ் விஹார் என பெயர் மாற்றம் செய்வது குறித்து மீண்டும் வலிய... மேலும் பார்க்க