இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் அண்ணாமலை (21). இவா், தனது தந்தையுடன் பூ வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், அண்ணாமலை சென்னைக்கு வேலைக்கு செல்வதாக தனது தந்தையிடம் கூறினாராம். இதற்கு, அவா் எதிா்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதில், அண்ணாமலை கோபித்துக் கொண்டு தான் தங்கியிருந்த அறையில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.