செய்திகள் :

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

post image

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் அழைப்பு வந்தது. அந்த போன் அழைப்பை தொடர்ந்து புனே முழுக்க போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். புனே சின்காட் போலீஸார் இது தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தானாஜி சாவந்த்தும் உடனே போலீஸ் கமிஷனரை சந்தித்து இது குறித்து பேசினார். ஆனால் தனது மகன் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றும், நண்பர்களுடன் சென்று இருக்கலாம். அவன் அதிருப்தியில் புறப்பட்டு சென்றான் எனக் கூறினார். பின்னர், அவர்கள் விமானத்தில் புறப்பட்டுச் சென்று தெரியவந்துள்ளது. எங்கு சென்றனர் என்பது குறித்த தகவலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

மகனுடன் தானாஜி

`எங்களிடம் சொல்லாமல் சென்றுவிட்டார் என்பதுதான் எங்களது கவலை' என்று தானாஜி சாவந்த் தெரிவித்தார். ரிஷிராஜ் விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் தனியார் விமானத்தில் ரிஷிராஜ் நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் நண்பர்களுடன் சென்றாரா அல்லது விமானத்தில் எங்காவது கடத்திச் செல்லப்பட்டாரா என்று தெரியவில்லை. அவர்கள் விமானத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பட்டப்பகலில் முன்னாள் அமைச்சர் மகன் கடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் ரஞ்சன் குமார் கூறுகையில், '' எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்றார். இதற்கிடையே ரிஷிராஜ் சென்ற விமானம் எங்கு செல்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த விமானம் தாய்லாந்தில் உள்ள பேங்காக்கிற்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்ட போலீஸார் விமானத்தை புனே திருப்பும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து விமானம் இரவு 9 மணிக்கு புனே திரும்பியது.

இச்சம்பவத்தால் நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பதற்றம் நிலவியது. ரிஷிராஜ் சாவந்த் தனது குடும்பத்திற்கு சொந்தமான ஜெ.எஸ்.பி.எம் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ரிஷ்ராஜ் சாவந்த்துடன் விமானத்தில் இரண்டு பேர் சென்றனர். விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவர்களிடம் போலீஸார் விசாரித்த பிறகு வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர்.

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்... மேலும் பார்க்க

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் க... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க