செய்திகள் :

NEEK: `தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்' - இசைவெளியீட்டு விழாவில் சரண்யா பேசியதென்ன?

post image
‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.

இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.  தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சரண்யா பொன்வண்ணன், “ எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எப்படி நான் நடித்த நாயகனைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதுபோல ‘VIP’படத்தை இன்றளவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

என்னை வெளியில் பார்க்கும்போது  சிலர் தனுஷின் அம்மா வருகிறார் என்றுதான் சொல்வார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். சினிமா என்னை தனுஷோடு ஒரு குடும்பமாகவே இணைத்திருக்கிறது. இவ்வளவு நாள் தனுஷ் என் மகனாக இருந்தார். இந்த செட்டில் பவிஷ்தான் என் மகன். செட்டில் பவிஷ் உடன் நடிக்கும்போது தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன்

தனுஷை எல்லோரும் ‘மல்டி டாஸ்க்’ நபர் என்று சொல்வார்கள். அதையெல்லாம் விட அவர் ஒழுக்கமான மனிதர். கடினமாக உழைக்கக்கூடியவர். அதனால்தான் அவர் வெற்றி அடைந்துகொண்டே இருக்கிறார். பவிஷ் இந்தப் படத்தில் கடினமாக உழைத்திருக்கிறார். அதற்கான வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்” என்று சரண்யா நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vijay: சினுக்கு சினுக்கு சின் சச்சின்..! 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் சச்சின்; எப்போது தெரியுமா?

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டுஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின... மேலும் பார்க்க

Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது" - S.N. பார்வதி

ஒரு காலத்துல மாசம் முழுக்க நாடகம் இருக்கும். சினிமா வாய்ப்பு கிடைச்சா கூட 'எப்பவாச்சும் கிடைக்கிற வாய்ப்பு'ன்னு அதைப் புறந்தள்ளிட்டு நாடகம் நடிக்கப் போயிருக்கேன். பிறகு சினிமா பக்கம் வந்த பிறகு சிவாஜி... மேலும் பார்க்க

NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

Karthi: "கைதி-2 வரப்போகுது, அடுத்தது..." - நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்

நடிகர் கார்த்தி இன்று (பிப் 11) குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் ப... மேலும் பார்க்க

NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குறித்து பவிஷ்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

NEEK: ``இன்டஸ்ட்ரிக்கு புது நடிகர்கள் வேணும்; தனுஷ் சார்..."- S.J சூர்யா சொல்வதென்ன?

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க