Vijay Prashant Kishor சந்திப்பின் பின்னணி? | ADANI -ஐ காப்பாற்ற Trump எடுத்த முட...
NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்
‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/9rvwhhoh/Poster-of-Nilavukku-Enmel-Ennadi-Kobam-1.jpg)
இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிகா சுரேந்திரன், “ என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.
அதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷ்யங்களை மறக்க முடியாது. இந்தப் படத்தில் ஜாலியாகப் பயணிக்க என்னுடன் பணியாற்றியவர்கள்தான் காரணம். படக்குழுவிற்கு நன்றி. முக்கியமாக என் அம்மாவிற்கும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.
![அனிகா சுரேந்திரன்](https://gumlet.vikatan.com/vikatan/2023-12/9e0eeb10-61a4-4814-b728-fba7dedfdddb/658b99b75fa4c.jpg)
எனக்கு இவ்வளவு வருடங்கள் சப்போர்ட் ஆக இருந்த ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...