செய்திகள் :

Karthi: "கைதி-2 வரப்போகுது, அடுத்தது..." - நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்

post image
நடிகர் கார்த்தி இன்று (பிப் 11) குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் பிறகு வரணும்னு நினைச்சோம். ஆனா, வர முடியல. அதனால இப்போ குடும்பத்தோட வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறோம்" என்றார். இதையடுத்து தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், " 'வா வாத்தியார்' படம் அடுத்துத் திரைக்கு வரவிருக்கிறது. அதையடுத்து 'கைதி 2', 'சர்தார் -2' என வரிசையாக படங்கள் இருக்கு. அதற்காகப் பணிகள் நடந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

கார்த்தி, லோகேஷ்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்திருக்கும் 'வா வாத்தியார்' படம் ரிலீஸ் தேதி தாமதமாகிக் கொண்டிக்கிறது. 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ', 'கூலி' என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய், கமல், ரஜினி என கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கிறார்.

அவரின் திரையுலக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது 'கைதி' திரைப்படம்தான். பெரும் வரவேற்பைப் பெற்ற அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

கார்த்தி, பி.எஸ். மித்ரன்

ரஜினி உடனான 'கூலி' படத்தை முடித்தக் கையோடு 'கைதி -2' வை லோகேஷ் எடுக்கவிருக்கிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்திக்கு அடுத்தடுத்த லைன் அப்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

Vijay: சினுக்கு சினுக்கு சின் சச்சின்..! 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் சச்சின்; எப்போது தெரியுமா?

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சச்சின்’ திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டுஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின... மேலும் பார்க்க

Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது" - S.N. பார்வதி

ஒரு காலத்துல மாசம் முழுக்க நாடகம் இருக்கும். சினிமா வாய்ப்பு கிடைச்சா கூட 'எப்பவாச்சும் கிடைக்கிற வாய்ப்பு'ன்னு அதைப் புறந்தள்ளிட்டு நாடகம் நடிக்கப் போயிருக்கேன். பிறகு சினிமா பக்கம் வந்த பிறகு சிவாஜி... மேலும் பார்க்க

NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குறித்து பவிஷ்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

NEEK: ``இன்டஸ்ட்ரிக்கு புது நடிகர்கள் வேணும்; தனுஷ் சார்..."- S.J சூர்யா சொல்வதென்ன?

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க

NEEK: `தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்' - இசைவெளியீட்டு விழாவில் சரண்யா பேசியதென்ன?

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க