பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை!
மனைவியைப் பிரிந்து வாழும் கணவர், மனைவியின் வண்டியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறி மனைவியைத் தண்டத்தொகை செலுத்த வைத்துள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த பெண், தான் செய்யாத குற்றத்திற்காகப் பலமுறை அபராதம் செலுத்தியுள்ளார்.
திருமணம் ஆகி ஒன்றரை மாதங்கள் ஆன இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாகத் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
திருமணத்தின் போது பரிசாக வழங்கப்பட்ட பைக்கை கணவர் தர மறுத்திருக்கிறார். மேலும், மனைவி மீதான கோபத்தால் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறித் தண்டத்தொகையைப் பெற்றிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-04/4865a398-c7b2-4df1-9621-94f75fed8d2e/Traffic_Rider.jpg)
தற்போது நடைமுறையின்படி போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதத் தொகை இ-சலான் பைக் உரிமையாளரின் செல்போனுக்கு நேரடியாக மெசேஜ் சென்றுவிடும் என்பதால் இவ்வாறு செய்திருக்கிறார்.
அவரது மனைவியின் செல்போனுக்கு மெசேஜ் தொடர்ச்சியாக வந்துள்ளன. அவரும் எப்போதாவது தவறுதலாகப் போக்குவரத்து விதியை மீறி இருப்போம் என்று எண்ணி ஆரம்பத்தில் அபராதங்களைச் செலுத்தியிருக்கிறார். தொடர்ச்சியாக இவ்வாறு நடக்கவே இது கணவரின் செயல் எனப் புரிந்துகொண்டுள்ளார்.
இதனை அடுத்து அந்த பைக்கை திருப்பிக் கேட்டபோது அதனையும் அந்த நபர் தர மறுத்துள்ளார். இதனால் விரத்தி அடைந்த பெண், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு குறித்து விசாரித்தபோது மனைவியைப் பழி வாங்க அந்த நபர் செய்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb