Comic Con: காமிக் ரசிகர்களின் திருவிழா; ஸ்பைடர் மேன், பேட் மேன், லூஃபி வேடமிட்டு...
`அபிஷேக்-க்கு இருக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது..!’ - சொத்தை பிரிப்பது பற்றி அமிதாப் சொல்வதென்ன?
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில், அதாவது 1990களின் இறுதியில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தார். படிப்படியாக நடித்து சம்பாதித்து இன்றைக்கு அவருக்கு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனுக்கு நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் நந்தா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இதில் ஸ்வேதா டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்போது தனது குழந்தைகளோடு மும்பையில்தான் வசிக்கிறார். அவருக்கு அமிதாப்பச்சன் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவை தானமாக எழுதிக்கொடுத்தார். அமிதாப்பச்சன் தனது சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு எப்படி பிரித்துக்கொடுக்கவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த உயில் குறித்து அமிதாப்பச்சன் அளித்திருந்த பேட்டியில்,'' நான் இறந்த பிறகு என்னிடம் இருப்பதை எனது மகன் மற்றும் மகளுக்கு சமமாக பிரித்துக்கொள்ள உயில் எழுதி இருக்கிறேன். எனது மகளையும், மகனையும் பிரித்துப்பார்க்கவில்லை. சொத்துக்களை சமமாக இருவருக்கும் கொடுக்கவேண்டும் என்று ஜெயாவும், நானும் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். பெண்கள் கணவன் விட்டிற்கு செல்வதாக அனைவரும் சொல்கின்றனர். ஆனால் எனது கண்களுக்கு அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமை எனது மகளுக்கும் இருப்பதாகவே பார்க்கிறேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.
அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராயிக்கும் சொந்தமாக 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட போதிலும், விளம்பரங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் கணிசமாக சம்பாதித்து வருகிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.