செய்திகள் :

Kumbh Mela: குடியரசுத் தலைவர் வருகையால் திணறிய உ.பி; 300 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவால் உத்தரப்பிரதேசம் திணறி வருகிறது. ஒட்டுமொத்த நிர்வாகமும் கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகிறது. அப்படி இருந்தும் மெளனி அமாவாசையன்று ஒரே நேரத்தில் பல கோடி பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

மெளனி அமாவாசைக்குப் பிறகு கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும் என்று நிர்வாகம் நினைத்தது. ஆனால், அதற்கு மாறாகக் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முதல் கும்பமேளாவிற்குச் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிர்க்கிறது.

கும்பமேளா
கும்பமேளா

வாகன ஓட்டிகள் பல மணி நேரம் எங்கும் நகர முடியாமல் நெடுஞ்சாலையில் அப்படியே வாகனத்துடன் காத்துக்கிடக்கின்றனர். அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலிருந்து பிரயக்ராஜ் நகரத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயக்ராஜ் செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கின்றன.

வாகனங்கள் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நிற்பதாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரயக்ராஜ் வந்தன என்றும், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி இன்னும் இரண்டு நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

வாரனாசி, கான்பூர், லக்னோ செல்லும் சாலையில் 25 கிலோ மீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெருக்கடி இருப்பதாகவும், பிரயக்ராஜ் நகரத்திற்குள் 7 கிலோ மீட்டர் அளவுக்குப் போக்குவரத்து நெருக்கடி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரயக்ராஜ் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையத்தை மூடிவிட்டனர்.

இது குறித்துக் கூடுதல் ஆணையர் குல்தீப் சிங் கூறுகையில், ''ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் கும்பமேளாவிற்கு வந்ததால் வாகனப் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் மிகவும் நெருங்கி வர வேண்டும் என்று நினைப்பதால் இது போன்ற நெருக்கடிகள் ஏற்படுகிறது'' என்றார்.

கும்பமேளா 2025

இரண்டு நாட்களாக இது போன்ற நிலை இருந்து வருகிறது. கும்பமேளாவிற்கு குடியரசுத் தலைவர் முர்மு வந்திருந்தார். அவர் திரிவேணி சங்கமத்தில் இன்று நீராடினார். அவர் வந்ததும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

பிரயக்ராஜ் நகரில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகச் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் 46 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியிருக்கின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`அபிஷேக்-க்கு இருக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது..!’ - சொத்தை பிரிப்பது பற்றி அமிதாப் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில், அதாவது 1990களின் இறுதியில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க

Adani: 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' - மகனின் திருமணத்தில் எடுத்த திடீர் முடிவு

ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந... மேலும் பார்க்க

கடைசி நேரத்தில் எழுந்த கேள்வி; மணமகள் மாமாவால் வெளிவந்த உண்மை; திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

மகாராஷ்டிராவில் சிபில் கணக்கு சரியில்லாத காரணத்தால் திருமணத்தையே மணப்பெண்ணின் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகில் உள்ள முர்திஜாபூர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக... மேலும் பார்க்க

AI, பத்திரிகையாளர்களின் செய்தி ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது - DW இயக்குநர் ஜெனரல் பீட்டர் லிம்பர்க்

ஜெர்மன் அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-இன் இயக்குநர் ஜெனரல், திரு. பீட்டர் லிம்பர்க், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: மத்திய பட்ஜெட் டு டெல்லி தேர்தல் முடிவுகள்..! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், டெல்லி தேர்தல் முடிவுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடிகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்வ... மேலும் பார்க்க