Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
Adani: 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' - மகனின் திருமணத்தில் எடுத்த திடீர் முடிவு
ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.
அதானியின் கடைசி மகன் ஜீத் அம்பானி. அவருக்கும் மும்பையின் பிரபல வைர வியாபாரியின் மகள் திவா ஜெய்மின் ஷாவுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடந்துள்ளது.
இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/xsj8vtyu/GjP5ehtXEAA3xRV.jpg)
இந்தத் திருமணத்தையொட்டி, ஜீத் மற்றும் திவா இனி ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுதிறனாளி பெண்களின் திருமணத்திற்கு ரூ.10 லட்சம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அதானி அவர் பங்கிற்கு சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றிற்கு ரூ.10,000 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
திருமணத்தின் புகைப்படங்களை கௌதம் அதானியும், ஜீத் அதானியில் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தத் திருமண வீடியோ ஒடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.