Kohli: "உடல் உறுப்பு தானம் செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்" - ரசிகர்களுக்குக் கோலி அட்வைஸ்
இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 12) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ``பிப்ரவரி 12 அன்று நரேந்திர மோடி மைதானத்தில் உடல் உறுப்பு தானம் செய்யும் முன்னெடுப்பு நிகழ்வில் இணையுங்கள்" என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-01/9c367c43-f4e5-4135-b71f-5cc47045d2fa/85912_thumb.jpg)
இது குறித்து, எக்ஸ் தளத்தில் BCCI, ``உடல் உறுப்புகளைத் தானம் செய்யுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள். உடல் உறுப்புகளைத் தானம் செய்து மாற்றத்தை உண்டாக்க உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறது. அதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவையும் BCCI பதிவிட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் இந்திய வீரர் விராட் கோலி, ``உங்களின் வாழ்நாளுக்குப் பிறகு உங்களின் உறுப்புகள் பிறரின் வாழ்க்கைக்கு உதவும். இப்போதே, உடல் உறுப்பு நன்கொடையாளராகப் பதிவு செய்து, புதிய வாழ்வை உருவாக்குங்கள்" என்று கூறினார். மேலும், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்களும் அந்த வீடியோவில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
,
— BCCI (@BCCI) February 10, 2025
Join the organ donation initiative on the 12th of February at the Narendra Modi Stadium in Ahmedabad! ️
Pledge to donate your organs and make a difference!#TeamIndia | #DonateOrgansSaveLives | #INDvENGpic.twitter.com/NiG0YRE773
இவர்களோடு, ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, ``களத்துக்கு அப்பால் ஊக்கம், ஒற்றுமை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது விளையாட்டு. எனவே, இந்த முயற்சியின் மூலம், எல்லாவற்றிலும் சிறந்த பரிசான வாழ்க்கைப் பரிசை வழங்க ஓரடி எடுத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு உறுதிமொழி, ஒரு முடிவு, பலரின் வாழ்வைக் காப்பாற்றும். ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்." என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs