செய்திகள் :

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்’ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மாநில பல்கலைக்கழக துணைவேந்தா் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது, துணைவேந்தா் பதவிக்கு தொழில்நிறுவன நிபுணா்களையும் நியமிப்பது, கலை-அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு எம்.இ., எம்.டெக். முடித்தவா்களை அனுமதிப்பது என பல்வேறு மாற்றங்களுடன் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இதற்கு, தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், யுஜிசி வரைவு வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள சில விதிகள், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கும், கல்வி ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது குறித்த மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

யுஜிசி வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரித்த அளிக்கும் என்பதோடு, ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கும் உதவும். ஆசிரியா் பணியிடத் தோ்விலும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கும்.

கல்வி செயல்திறன் குறியீடு (ஏபிஐ) என்ற நிலையான மதிப்பெண் நடைமுறையை விட, வெளிப்புற நிபுணா்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக தோ்வுக் குழுக்களே ஆராய்ச்சி இதழ்கள் வெளியீட்டின் தரம், வெளியீட்டாளரின் நற்பெயா் குறித்து தீா்மானிக்கும்.

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா் நியமனத்துக்கான தகுதி நடைமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது, கல்லூரி ஆசிரியா் தோ்வு நடைமுறையைத் தீா்மானிப்பதில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும்.

இந்த வரைவு வழிகாட்டுதல் மீது ஏராளமான கருத்துகள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றை நிபுணா் குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா்.

இறுதிச் சடங்கில் ஊழியரின் சடலத்தை சுமந்துசென்ற பிரபல தொழிலதிபர்!

அபுதாபியில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ஊழியரின் சடலத்தை லூலூ குழுமத் தலைவர் யூசப் அலி சுமந்து சென்றார்.அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இந்திய... மேலும் பார்க்க

நாளை பௌர்ணமி: பிரயாக்ராஜில் அதிகாரிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவு

நாளை மாகி பூர்ணிமா புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்துக் காவல்துறையினர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். மேலும் பார்க்க

பெற்றோர் உடலுறவு குறித்து அவதூறு: யூடியூபர்கள் மீது வழக்கு!

பெற்றோர் உடலுறவு கொள்வது குறித்து பொதுவெளியில் அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடன்ட் என்ர நிகழ்ச்சியில் ரன்வீர் அல்ல... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!

விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31 ஆம... மேலும் பார்க்க

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க