தஞ்சாவூரில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு: ரூ. 5 லட்சம் நிதியுதவி!
கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ மை பியூட்டிஃபுல்’
பரிதாபங்கள் கோபி - சுதாகர் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இந்த சேனலுக்கு 60 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் இவர்களது மீம்ஸ், புகைப்படங்கள் என அடிக்கடி டிரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்கள்.
இதையும் படிக்க: உன்னுடனேயே எப்போதும்..! -மகேஷ் பாபுவின் காதல் பதிவு
கடந்தாண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று படத்திற்கு, ‘ஓ மை பியூட்டிஃபுல்’ எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பரிதாபங்கள் புரடக்ஷனில் உருவாகும் இந்தப் படத்தினை விஷ்ணு விஜயன் இயக்குகிறார். விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, கோதண்டன், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை- சரத் ஜே. ஒளிப்பதிவு- சக்திவேல் , கே.பி. ஸ்ரீ.