சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?
Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
நம் தினசரி அலைச்சல், உளைச்சல்களிலிருந்து விடுதலை கொடுத்து அன்பின் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில்தான் முத்தம். முத்தம் கொடுக்கவும் பெறவும் இனம், பாலினம், வயது என எந்த வரம்புகளும் இல்லை. வாழ்வெல்லாம் அன்பைச் சுமக்கும் கருவியான முத்தத்தைக் கொண்டாடுவோம்.
அன்பு, காமம் என்ற இரண்டு பாதைகளில் முத்தம் பயணிக்கிறது. காதலிலும் சரி, பிற உறவுகளிலும் சரி, பிணைப்பை அதிகப்படுத்தும் வசிய மருந்தாக முத்தத்தைச் சொல்லலாம். ஒரு முத்தம் பரிமாறப்படுவதனால் நமக்கு என்னென்ன கிடைக்கின்றன தெரியுமா?
முத்தத்தினால் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 1 நிமிடம் வரை நீளும் முத்தத்தினால் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. எவ்வளவு சிறிய முத்தமாயினும் குறைந்து 2 கலோரிகள் எரிக்கப்படும்.
உண்மையில் முத்தம் முகத்துக்கான உடற்பயிற்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முத்தத்திலும் உதடு மற்றும் அதைச் சுற்றிய 12 தசைகள் செயல்படுகின்றன. ஒரு ஆழமான முத்தத்தில் 34 முக தசைகள் இயக்கப்படுகின்றன. முகம் மற்றும் தாடையின் வடிவம் சீராக்க முத்தம் உதவும். அதிகம் முத்தமிடுபவர்கள் அதிக அழகாக இருப்பார்கள்!
முத்தம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு Philematology எனப் பெயர். Philematology படி, முத்தமிடும் போது நம் இதயத் துடிப்பு 58% அதிகரிக்கிறது.
10 வினாடிகள் உதட்டில் முத்தம் கொடுக்கும் போது 9 மில்லி லிட்டர் உமிழ் நீர் பரிமாறப்படுகிறது. உமிழ்நீரிலிருக்கும் புரதம், கொழுப்பு, உப்பு மற்றும் நீரும் பரிமாறப்படுகிறது. அதிக முத்தம் அதிக ஆரோக்கியம்!
முத்தமிடும்போது 66 விழுக்காடு மக்கள் கண்களை மூடிக்கொள்கின்றனராம்.
கொழுப்பு மற்றும் உடல் பருமனைத் அதிகரிக்கும் கார்டிசால் ஹார்மோன் கோபத்தை அதிகரிக்கும். நாம் முத்தமிடும் போது இந்த கார்டிசால் ஹார்மோனின் சுரப்புக் குறைகிறது. நம் உணர்ச்சிகளைப் பெருக்கும் அட்ரீனலின் மற்றும் மகிழ்ச்சிக்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன், மனதில் அமைதியை ஏற்படுத்தும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. அதிக முத்தம் அதிக மகிழ்ச்சி!
முத்தத்தினால் விளையும் நன்மைகள்!
மன உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து விடுதலை தரும்,
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்,
சுய மதிப்பீட்டை அதிகரிக்கும்,
நம் துணையுடனான பிணைப்பை அதிகரிக்கவும் மதிப்பிடவும் உதவும்,
வலியிலிருந்து நிவாரணம் தரும்.
இப்படி முத்தத்திலிருந்து நமக்குப் பல நல்ல விஷயங்கள் கிடைக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...