செய்திகள் :

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!

post image
உலக புற்றுநோய் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக யுனிஃபை டு நோட்டிஃபை என்ற தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முன்னெடுக்கிறது.

இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI), தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (TASO) மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கம் (TAMPOS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு இப்பரப்புரை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.  புற்றுநோய் அரக்கனை எதிர்த்துப் போரிடுவதற்கு மிக அதிகமாக தேவைப்படும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட வேண்டிய ஒரு நோய் நேர்வாக புற்றுநோயை வகைப்படுத்த இந்திய அரசை இந்த பரப்புரை திட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

மேலும், இது தொடர்பாக தேசிய அளவில் அறிவிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக புற்றுநோயை ஆக்குவது என்ற தலைப்பு மீது ஒரு இன்டராக்டிவ் அடிப்படையிலான நிபுணர் குழு விவாதமும் நடத்தப்பட்டது.  தேனாம்பேட்டை – அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். சங்கர் ஸ்ரீனிவாசன் நெறிப்படுத்தி வழங்கிய இக்குழு விவாதத்தில் AROI, TAMPOS, TASO அமைப்புகளின் பிரதிநிதிகளும், அப்போலோ கேன்சர் சென்டர் – வானகரம் – ன் மருத்துவ புற்றுநோயியல் துறைத்தலைவர் டாக்டர். S. சுரேஷ், அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். பிரசாத் ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.  அறிவிக்கத்தக்க நோயாக, புற்றுநோயை வகைப்படுத்த வேண்டியதன் அவசரத்தையும், அவசியத்தையும் இந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் அடிக்கோடிட்டு காட்டினர்.  இவ்வாறு இதனை அறிவிப்பது, புற்றுநோய் தொடர்பான தரவு சேகரிப்பு, ஆதாரவள ஒதுக்கீடு மற்றும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை விளைவுகள் ஆகியவற்றை மேம்படுத்துவது மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.  

ஒவ்வொரு ஆண்டும் 14 இலட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நேர்வுகள் இந்தியாவில் ஏற்படுவதாக அறியப்படுகிறது.  2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையானது, 15.7 இலட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அரசின் சுகாதாரத்துறைக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்துவது கீழ்கண்டவற்றிற்கு வழிவகுக்கும்: 

  1. நிகழ்நேர தரவு சேகரிப்பையும் மற்றும் துல்லியமான தகவலளிப்பையும் இது உறுதி செய்யும்; இதன்மூலம் இந்நோயின்  அளவு மற்றும் வீச்செல்லை குறித்து ஒரு தெளிவான அறிவு சாத்தியமாகும். 

  2. நோய்த்தோற்றப் பகுப்பாய்வு மற்றும் இலக்குடன் கூடிய இடையீட்டு செயல்உத்திகள் வழியாக நிலைப்படுத்தப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்குதல். 

  3. புற்றுநோய் சிகிச்சையில் துல்லியம், திறன் மற்றும் அணுகுவசதியை மேம்படுத்தும்; இதன்மூலம் உலகளாவிய புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும். 

2022-ம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு மீதான நாடாளுமன்ற நிலைக்குழு, அறிவிக்கத்தக்க நோயாக புற்றுநோயை வகைப்படுத்தலாம் என்ற பரிந்துரையுடன் ஒரு அறிக்கையை மாநிலங்களவைக்கு சமர்ப்பித்தது.  இந்த முன்னெடுப்பின் வழியாக, வரவிருக்கும் பட்ஜெட் தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவது இந்திய அரசின் அடுத்த சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று இத்தொழில்துறை நிபுணர்கள் நம்புகின்றனர். 

AROI – ன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளையின் தலைவர் டாக்டர். V. பாலசுந்தரம் இது தொடர்பாக கூறியதாவது: சான்று அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படுகின்ற முக்கியமான நோய்தோற்றம் தொடர்பான தரவை இது நமக்கு வழங்கும் என்பதால், அறிவிக்கத்தக்க நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை AROI ஆதரிக்கிறது.  இந்தியாவில் புற்றுநோய் சுமையின்  தற்போதைய மதிப்பீடுகள் முழுமையற்ற, குறைவான தரவின் அடிப்படையில் இருக்கின்றன.  சட்டத்தின்படி கட்டாயமாக தகவலளிப்பு செய்ய வேண்டுமென்ற விதியானது, புற்றுநோயின் பாங்குகள் குறித்து துல்லியமான உள்நோக்குகளை நமக்கு வழங்கும்; இந்நோய் வராமல் தடுப்பதற்கு சிறப்பான உத்திகளை நாம் உருவாக்கவும் மற்றும் அதிக திறன்மிக்க வழியில் ஆராய்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது நமக்கு உதவும்.” 

தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின்  (TASO) செயலாளர் டாக்டர். ஐயப்பன் பேசுகையில், “ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதுடன், சிகிச்சைக்கான செலவையும் குறைக்கும்.  கண்டிப்பாக அறிவிக்க வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்துவதற்கான இந்த கோரிக்கை மற்றும் முன்னெடுப்பிற்கு TASO அமைப்பு உறுதியான ஆதரவளிக்கிறது.  விரிவான விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் இதற்கான சிகிச்சை அனைவருக்கும் கிடைப்பதை இது உறுதிசெய்யும்.  புற்றுநோய்க்கான கண்காணிப்பு அமைப்பு முறையில் தற்போது நிலவும் இடைவெளிகளை இந்நடவடிக்கை நிரப்பும்; சுகாதார துறையில் இயங்கும் பல்வேறு அமைப்புகள், நபர்களுக்கிடையே சிறப்பான ஒருங்கிணைப்பை இது ஏதுவாக்கும்.  முழுமையான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. அறிவிக்கத்தக்க நோயாக புற்றுநோயை அறிவிப்பது, இன்னும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சைக்காக சேவைகளை மேலும் மேம்படுத்த எங்கள் அனைவருக்கும் இது உதவும்.  இந்த அறிவிக்கையின் மூலம் அனைத்து புற்றுநோய் நேர்வுகளும் தகவலளிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.  புற்றுநோய் நேர்வு, உயிரிழப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் உயிர்பிழைக்கும் விகிதங்களை தடமறிந்து பகுப்பாய்வு செய்ய இது எங்களை ஏதுவாக்கும்.” என்று கூறினார். 

தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கத்தின்  (TAMPOS) தலைவர் டாக்டர். K. கலைச்செல்வி இது தொடர்பாக கூறியதாவது: அறிவிக்கப்பட நோயாக புற்றுநோயை ஆக்குவது மாநில அளவில் புற்றுநோயின் பாங்குகளையும், பரவல் செயல்பாடுகளையும் குறித்த நமது புரிதலை இன்னும் புரட்சிகரமானதாக மாற்றும்.  புற்றுநோய் வகைகள் மற்றும் இடர்க்காரணிகளின் பிராந்திய அளவிலான மாற்றங்களையும். வேறுபடல்களையும் அடையாளம் காண இது எங்களுக்கு உதவும்.  இதன்மூலம் இலக்குடன் கூடிய அதிக முன்தடுப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு இது வழிவகுக்கும்.  நாடெங்கிலும் புற்றுநோய்க்கான சிகிச்சை மையங்களின் வலையமைப்பை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் நிறுவியிருக்கிறது.  இந்த வலையமைப்பானது, மாநில அளவில் புற்றுநோய் குறித்த தரவை சேகரிப்பதிலும், பகுப்பாய்வு செய்வதிலும் மிக முக்கியப் பங்காற்றும்.  மாநில அளவில் புற்றுநோய் தரவை பகுப்பாய்வு செய்வதன் வழியாக, புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் நிகழ்கின்ற இடங்களையும், பிரிவுகளையும் நம்மால் அடையாளம் காண முடியும்; இதன்மூலம் இந்த ஏற்ற இறக்கங்களுக்கேற்ப உரிய இடையீட்டு நடவடிக்கைகளை உருவாக்க முடியும்.”

AHEL – ன் குழும புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் செயல்பாடுகளுக்கான இயக்குனர் திரு. ஹர்சத் ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், “கண்டிப்பாக அறிவிக்க வேண்டிய நோயாக புற்றுநோயை அறிவிக்கை செய்வது, இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைப் பராமரிப்பை நாம் அணுகும் விதத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு நிலைமாற்ற நடவடிக்கையாக இருக்கும்.  ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், முறையாக ஆவணப்படுத்தப்படுவதன் மூலம் அதன் பாங்குகளையும், பண்பியல்புகளையும் நம்மால் சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்; ஆதாரவளங்களை திறமையாக ஒதுக்கீடு செய்வதும் மற்றும் இலக்குடன் கூடிய சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்கவும் நம்மால் இயலும்.  அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ல் ஒரு சிறப்பான புற்றுநோய் பரிவகத்தை நாங்கள் ஏற்கனவே நிறுவியிருக்கிறோம்; புற்றுநோயின் போக்குகளையும் மற்றும் விளைவுகளையும் தடமறிவதற்கு இது எங்களை ஏதுவாக்கியிருக்கிறது.  இப்போது, தொழில்துறையின் நிபுணர்களது மதிப்புமிக்க ஆதரவை இவ்விஷயத்தில் நாங்கள் கோருகிறோம்.  நாட்டின் மக்களை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.  இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சைப் பராமரிப்பையும் மற்றும் அதன் மீதான ஆராய்ச்சியையும் பரவலாக்க இது பெரிதும் உதவும்,” என்று கூறினார். 

இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கு ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற இப்பரப்புரை திட்டம், ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாகும்.  ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும், ஒவ்வொரு நோயாளியும் முக்கியமான தரவாக கருதப்படுவதற்கு இந்த அறிவிக்கை உதவும்.  இந்தியாவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை என்ற இலக்கை நோக்கியப் பயணத்தில் எந்த தரவும் தவறவிடப்படாமல் இருப்பதை இந்த அறிவிக்கை உறுதிசெய்யும்.  

ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உட்பட, 15 மாநிலங்கள், அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை ஏற்கனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது.  உலகளவில் யுஎஸ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க், நோர்டிக் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல் கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் காம்பியா உட்பட, 12-க்கும் கூடுதலான நாடுகள் புற்றுநோய் நேர்வு குறித்த தகவலை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை அங்கீகரித்திருக்கின்றன. 

புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.

உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது.

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித... மேலும் பார்க்க

MAHER: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் சுகாதாரத் திட்டங்கள் தொடக்கம்

MAHER: சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.உயர்கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உய... மேலும் பார்க்க

`Right to Die With Dignity' - முதல் மாநிலமாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கர்நாடகா!

குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட... மேலும் பார்க்க

Pregnancy: `கருவுக்குள் கரு' - 5 லட்சம் கருக்களில் ஒன்றுக்கு ஏற்படும் அரியவகை; என்ன சிகிச்சை?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவின் உள்ளே மற்றொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிக மிக அரிதான ஒன்றாகப் பார்... மேலும் பார்க்க

Apollo: வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருமிதத்துடன் இன்று தொடங்கி வைத்திருக்கிறது.வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாட... மேலும் பார்க்க

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசி... மேலும் பார்க்க