AR Rahman: Shape of You x ஊர்வசி ஊர்வசி... ரஹ்மான் பாடலால் Vibe-ஆன Ed Sheeran!
சென்னையில் நடந்த பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாததாக மாறியிருக்கிறது. காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
எட் ஷீரன் இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் இணைந்தது ரசிகர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. சர்வதேச அளவில் ஹிட்டான எட் ஷீரனி Shape of You ரஹ்மானின் ஊர்வசி ஊர்வசி பாடல்கள் இணைந்து உருவாக்கப்பட்ட மேஷ்அப்பை இருவரும் பாடினர்.
ரஹ்மான் அவரது மேஜிக்கல் குரலில் பாட, ரசிகர்களுடன் சேர்ந்து தானும் வைப் ஆனார் எட் ஷீரன்.
ரஹ்மானுடன் இணைந்து பாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "என்ன ஒரு கௌரவம் @ஏ.ஆர்.ரஹ்மான்" என எழுதியிருந்தார்.
ரஹ்மான் மற்றும் ஷீரனின் வீடியோ இணையத்தில் வைரலானது. என்னதான் சென்னையில் அதிகமாக சர்வதேச இசை நிகழ்ச்சிகள் இல்லை என்றாலும் இதுபோன்ற ஒரு கொலாபரேஷனை காண சென்னை கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் ரியாக்ஷன்.
இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திருந்தார் எட் ஷீரன். ரஹ்மானை எட் ஷீரன் புகைப்படம் எடுப்பதுபோன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் ரஹ்மான்.