'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
AR Rahman : ``ரஹ்மான் நட்பாகப் பழகக்கூடியவர் அல்ல..." - பாடகர் சோனு நிகம் ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவிலிருந்து இந்தி சினிமா அங்கிருந்து ஹாலிவுட் என இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் புதுமையைக் காட்டி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளூர் விருதுகள் முதல் உலக விருதுகள் வரை எத்தனையோ வென்ற போதும், `எல்லாப் புகழும் இறைவனுக்கே' என மேடைகளில் `man of few words' என தன்னடக்கத்தோடிருப்பார்.
இந்த நிலையில், ரஹ்மானுடன் பணிபுரிந்த பாடகரும் இசையமைப்பாளருமான சோனு நிகம், ரஹ்மான் நட்பாகப் பழகக் கூடியவர் அல்ல என்றும், யாரைப் பற்றியும் தவறாகப் பேசமாட்டார் என்றும் கூறியிருக்கிறார். O2 India என்ற ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய சோனு நிகம், ``அவருக்கு (ரஹ்மான்) ரிலேஷன்ஷிப்ஸ் இல்லை. அத்தகைய நபரும் அல்ல. அவர் யாருடனும் மனம் திறந்து பேசுவதில்லை. குறைந்தபட்சம், நான் அவரை அப்படிப் பார்த்ததில்லை.
தன்னை திலீப் என்று அறிந்த பழைய நண்பர்களிடம் மட்டுமே அவர் மனம் விட்டுப் பேசுகிறார். அதேபோல், அவர் நட்பாகப் பழகக் கூடியவர் அல்ல. தன்னுடைய வேலையைச் செய்வார், தொழுகைக்குச் செல்வார். யாரிடமும் தவறாக நடந்துகொள்ளவும் மாட்டார். யாருடைய மனதையும் புண்படுத்தவோ, யாரையும் தவறாகப் பேசவோ மாட்டார். இவற்றிலிருந்து அவர் ஒதுங்கியே இருக்கிறார். யாரையும் தன்னிடம் நெருங்கவிடமாட்டார். அப்படித்தான் இருக்க வேண்டும்." என்று கூறினார்.
மேலும், அமெரிக்காவில் ஒரு சுற்றுப்பயணத்தின்போது மகிழ்ச்சியாக இருந்ததை நினைவு கூர்ந்த சோனு நிகம், ``அவருக்கு கிசுகிசுக்கக் கூட தெரியாது. அது குறையொன்றுமல்ல, அவர் அப்படித்தான். என்னைப் பற்றியோ, வேறு யாரைப் பற்றியோ அவர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதேபோல், மற்றவர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. அவர் ஒரு தனித்துவமான ஆளுமை." என்றார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...