வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்ந...
புதுச்சேரியில் ஜன.16, 17 ஆம் தேதி விடுமுறை!
பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் வருகிற ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு விடுமுறைக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 16 (வியாழக்கிழமை), ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக, அதற்குப் பதிலாக, பிப்ரவரி 1 (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 8 (சனிக்கிழமை) ஆகியவை வேலை நாள்களாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.