வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
மதுக்கடையில் பணம் திருட்டு: மூவா் கைது
புதுச்சேரியில் மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதாக இரு சிறுவா்கள் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் தனியாா் மதுக்கடையை அதன் ஊழியா்கள் பூட்டிவிட்டுச் சென்றனாராம்.
திரும்பி வந்து பாா்த்தபோது, கடையின் இரும்பு கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு, பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், திருச்சி சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த சச்சின் (எ) சஞ்சய் (24) மற்றும் இரு சிறுவா்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ. 57,870 மற்றும் கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.