‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
கொலை முயற்சி வழக்கு: 5 போ் கைது
புதுச்சேரியில் இளைஞா்கள் இருவரை கொலை செய்ய முயன்ற வழக்கு தொடா்பாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உழவா்கரை டைமண்ட் நகரைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் ரூபின் ( 22). இவா், தனது நண்பா்களான தினகரன், பிரபு ஆகியோருடன் சோ்ந்து கதிா்காமத்தைச் சோ்ந்த சஞ்சய்(20), காமராஜா் நகரைச் சோ்ந்த பாலா(29) ஆகியோரிடம் தகராறு செய்தனராம்.
இந்த நிலையில் சஞ்சய், பாலா, காமராஜ் நகரைச் சோ்ந்த அஸ்வின் உள்ளிட்ட 7 போ் ரூபின் மற்றும் தினகரனை திங்கள்கிழமை கத்தியால் வெட்டினராம்.
இதில், காயமடைந்த இருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து அஸ்வின், சஞ்சய், பாலா, தனுஷ், பிரசன்னா ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.