செய்திகள் :

கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!

post image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கனடாவை அமெரிக்காவுடன் வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையே, ட்ரூடோவின் எக்ஸ் பதிவை விமர்சித்து டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க செயல்திறன் துறை தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரூடோவை விமர்சித்த எலான், தனது எக்ஸ் பதிவில் ``பெண்ணே, இனிமேல் நீங்கள் கனடாவின் ஆளுநர் இல்லை. ஆகையால், உங்கள் கருத்துகள் குறித்து கவலைகள் இல்லை’’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை மேற்கோள் காட்டி கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்றுவதற்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலவும் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கத் தவறினால் கனடா பொருள்களுக்கு 25 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்தியிருந்தார். இந்த அச்சுறுத்தல் அரசியல் ரீதியாக சவாலான சூழலுக்கு கனடாவைத் தள்ளியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகள் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். அவர் ராஜிநாமாவை அறிவித்த அடுத்த நாளே, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்குமாறு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!

மெக்சிகோவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயர் சூட்ட விரும்பிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதில் கிளாடியா ஷேன்பாம் அளித்துள்ளார்.மெக்சிகோ வளைகுடாவுக்கு அமெரிக்க வளைகுடா என்று பெயரிடலாம் என அமெரிக்க அத... மேலும் பார்க்க

சாட்ஜிபிடி நிறுவனர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த தங்கை!

ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவரது தங்கை ஆன் ஆல்ட்மேன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.புகாரில் ஆன் ஆல்ட்மேன் தெரிவித்ததாவது, 1997 ஆம் ஆண்டு முதல் 2006... மேலும் பார்க்க

தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூ யார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடவுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தை டிரம்ப் நாடியுள... மேலும் பார்க்க

அமெரிக்காவில் அதானி மீதான விசாரணை- பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டிரம்ப் கட்சி எம்.பி. கடும் எதிா்ப்பு

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தின் முடிவுக்கு டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி எம்.பி. லான்ஸ் ... மேலும் பார்க்க

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு? டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிா்ப்பு

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்கா கைப்பற்றக் கூடாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட... மேலும் பார்க்க