சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
களை எடுக்கும் இயந்திரம் திருடிய 3 போ் கைது
விவசாய களை எடுக்கும் இயந்திரத்தை திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆா்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வாசு மகன் சோமசேகா்(25). இவருக்கு சொந்தமான நிலம் திருத்தணி ஒன்றியம் வி.கே.என்.கண்டிகை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் பூச்செடிகள் வைத்து பராமரித்து வருகிறாா். புதன்கிழமை வாசு தோட்டத்தில் களை எடுக்கும் இயந்திரம் மூலம் புல்லை அறுத்துக் கொண்டிருந்தாா்.
பின்னா் மதியம், இயந்திரத்தை நிலத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். அப்போது, 3 இளைஞா்கள் இயந்திரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றனா். அவ்வழியாக வந்த பொதுமக்கள் 3 பேரையும் மடக்கிப் பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணையில் இயந்திரத்தை திருடியவா்கள் பள்ளிப்பட்டு தாலுகா, கோடூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயசங்கா்(19), மணிகண்டன்(22), 17 வயது சிறுவன் எனவும், இயந்திரத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டனா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா்.