செய்திகள் :

தினம் தினம் திருநாளே!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

10.01.2025

மேஷம்:

இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். வியாபாரம் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். மேலிடத்தின் நட்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்:

இன்று எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்:

இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பெரியோர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்:

இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:

இன்று பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

துலாம்:

இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடை வெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்:

இன்று மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுஷ் வெளியிட்ட டிஎன்ஏ டீசர்!

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.கிரைம் திரில்லர் வகைய... மேலும் பார்க்க

450 கலைஞர்களால் உருவானது..! ராமாயணம் அனிமேஷன் டிரைலர்!

ஜப்பான் அனிமேஷன் பாணியில் உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ராமாயணா : தி லெஜென்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ எனப் பெயரிட... மேலும் பார்க்க

எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. மல்லார்கோ அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. முதல் பாதி ரியல்... மேலும் பார்க்க

ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது. இதையடுத்து, காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வ... மேலும் பார்க்க

பெகுலா - புடின்சேவா அரையிறுதியில் மோதல்

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா - கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா மோதுகின்றனா். முன்னதாக... மேலும் பார்க்க

சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த சென்னை அண... மேலும் பார்க்க