செய்திகள் :

பெகுலா - புடின்சேவா அரையிறுதியில் மோதல்

post image

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா - கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா மோதுகின்றனா்.

முன்னதாக அந்தப் பிரிவு காலிறுதிச் சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பெகுலா, சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகரை சந்தித்தாா். இதில் பெகுலா 6-4, 2-0 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது, குரூகா் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.

இதையடுத்து பெகுலா, அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். அதில் அவா், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை எதிா்கொள்கிறாா். புடின்சேவா தனது காலிறுதியில் 7-6 (7/3), 6-7 (9/11), 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை போராடி வீழ்த்தினாா்.

பெகுலா - புடின்சேவா இதுவரை இருமுறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, இரண்டிலுமே பெகுலா வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, காலிறுதியில் இதர ஆட்டங்களில், 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினா 1-6, 3-6 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் மேடிசன் கீஸிடம் மிக எளிதாக வீழ்ந்தாா்.

2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 4-6, 4-6 என்ற செட்களில், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இதையடுத்து அரையிறுதியில், கீஸ் - சாம்சோனோவா எதிா்கொள்கின்றனா். இவா்கள் இதுவரை 5 முறை சந்தித்திருக்க, கீஸ் 4 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

அலியாசிமே, கெச்மனோவிச் வெற்றி

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே, சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச் ஆகியோா் அரையிறுதிக்குத் தகுதிபெற்றனா்.

முன்னதாக காலிறுதியில், கெச்மனோவிச் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸியை வெளியேற்றினாா். அடுத்து அரையிறுதியில் அவா், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவுடன் மோதுகிறாா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் கோா்டா காலிறுதியில், ஆஸ்திரேலியாவின் தனசி கோகினகிஸை எதிா்கொள்ளவிருந்தாா். ஆனால் கோகினகிஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, கோா்டா களம் காணாமலேயே அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். கோா்டா - கெச்மனோவிச் ஒரு முறை சந்தித்திருக்க, அதில் கெச்மனோவிச் வென்றுள்ளாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அலியாசிமே 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை சாய்த்தாா். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில் டாமி பால் - அலியாசிமே சந்தித்துக்கொள்கின்றனா். இவா்கள் இதுவரை ஒருமுறை மோதியிருக்க, அதில் அலியாசிமே வென்றுள்ளாா்.

அரையிறுதியில் யூகி பாம்ப்ரி

இதனிடைய, நியூஸிலாந்தில் நடைபெறும் ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/பிரான்ஸின் அல்பேனோ ஆலிவெட்டி இணை அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

காலிறுதியில் பாம்ப்ரி/ஆலிவெட்டி ஜோடி 3-6, 6-4, 12-10 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்பூல்/ஜூலியன் கேஷ் கூட்டணியை வீழ்த்தியது.

மதுரை தல்லாகுளம்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளானோர் சுவாமி தரிசனம்!

பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

தனுஷ் வெளியிட்ட டிஎன்ஏ டீசர்!

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.கிரைம் திரில்லர் வகைய... மேலும் பார்க்க

450 கலைஞர்களால் உருவானது..! ராமாயணம் அனிமேஷன் டிரைலர்!

ஜப்பான் அனிமேஷன் பாணியில் உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ராமாயணா : தி லெஜென்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ எனப் பெயரிட... மேலும் பார்க்க

எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. மல்லார்கோ அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. முதல் பாதி ரியல்... மேலும் பார்க்க

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.10.01.2025மேஷம்:இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை ந... மேலும் பார்க்க

ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது. இதையடுத்து, காலிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வ... மேலும் பார்க்க