எல் - கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டியில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட்!
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
மல்லார்கோ அணியுடனான அரையிறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது.
முதல் பாதி ரியல் மாட்ரிட் எவ்வளவு முயன்றும் கோல்கள் அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் 63’, 90+2’, 90+5’ ஆகிய நிமிஷங்களில் முறையே ஜூட் பெல்லிங்ஹாம், மார்டின், ரோட்ரிகோ கோல் அடித்து அசத்தினார்கள்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி - பார்சிலோனாவுடன் மோதுகிறது. எல் - கிளாசிக்கோ என்றழைக்கப்படும் இவ்விரு அணிகளுக்கான மோதல் பல வருடங்களுக்காக நீடிக்கிறது.
கால்பந்து கிளப் விளையாட்டுகளில் இந்த இரு அணிகளுக்குதான் ரசிகர்களும் அதிகம்.
பிரதமர் மோடியும் எல் -கிளாசிக்கோ போட்டிகள் குறித்து சமீபத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டைவிட ஒருமுறை அதிகமாக வென்றுள்ள பார்சிலோனா அணி இறுதிப் போட்டியில் மீண்டும் வென்று ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.