செய்திகள் :

விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?

post image

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், முன்னணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரில் 5 டி20 போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் இரு தொடருக்கான அணிகள் அறிவிக்கப்படவிருப்பதாக பிசிசிஐயின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க | பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுலுக்கு இங்கிலாந்துக்கு தொடரில் இருந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் ராகுலுக்கு ஓய்வளிக்கப்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.மேலும், விக்கெட் கீப்பருக்கான போட்டியில் டெஸ்ட் கீப்பர் ரிஷப் பந்த், டி20 கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க |கௌதம் கம்பீர் சுயநலமற்றவர்..!ஆதரவாக பேசிய ஹர்ஷித் ராணா!

எவ்வாறாயினும், யார் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் இருக்கிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ராகுல் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 276 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஏற்கனவே, விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ராகுல். இந்தத் தொடருக்கான காலிறுதிப் போட்டிகள் இந்த வாரத்தில் நடைபெறவிருக்கின்றன.

ஆஸ்திரேலிய தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது போல உள்ளூர் போட்டிகளான ரஞ்சி தொடரில் கேஎல். ராகுல் விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க |மணல் காகித மோசடியாளர்..! கிண்டல்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்!

சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்

இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி ... மேலும் பார்க்க

சேப்பாக்கில் மோதும் இந்தியா - இங்கிலாந்து! டிக்கெட் விற்பனை ஜன.12-ல் தொடக்கம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வருகிற ஜனவரி 12-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிர... மேலும் பார்க்க

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ்! என்ன பிரச்னை?

பிபிஎல் தொடரில் அலெக்ஸ் ஹேல்ஸ், தமிம் இக்பாலுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. போட்டி முடிந்து கை குழுக்க சென்றபோது தமிம் இக்பால் தன்னை தனிப்பட்ட விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டி வாக... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.விஜய் ஹசாரே தொடரில் விளையாடிவந்த இந்திய கிரிக்கெட... மேலும் பார்க்க