சேப்பாக்கில் மோதும் இந்தியா - இங்கிலாந்து! டிக்கெட் விற்பனை ஜன.12-ல் தொடக்கம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வருகிற ஜனவரி 12-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன.
வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 12 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது. டிக்கெட்டின் விலை ரூ.1500-ல் இருந்து ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.