அதானி வில்மர் பங்கு 10% சரிவு!
புதுதில்லி: அதானி குழுமமானது, அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள 20 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை வெளிச்சந்தையில் திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து, வில்மரின் பங்குகள் சுமார் 10 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் அதன் விலை 9.84 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.05 ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் 9.69 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.10 ஆக உள்ளது. மத்திய வர்த்தகத்தில் சற்று மீண்டு ரூ.296.95 ஆக வர்த்தகம் ஆனது.
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு சரிவான நிலையை எட்டியது!
கடந்த மாதம் அதானி வில்மரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, குழுமமானது, ஜனவரி 10 ஆம் தேதி நிறுவனத்தில் 17.54 கோடி பங்குகளை (13.50 சதவிகித பங்குகள்) சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கும், ஜனவரி 13 ஆம் தேதி (சில்லறை முதலீட்டாளர்களுக்கு) தலா ரூ.275 என்ற குறைந்தபட்ச விலையிலும் விற்பனை செய்யும். இதுகுறித்து நிறுவனமானது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.