கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிந்தது!
மும்பை: உலகளாவிய பங்குகளில் பலவீனமான போக்கும், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் மற்றும் காலாண்டு வருவாயில் மந்தநிலை ஆகியவை தொடர்ந்ததால் இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்ததது.
அதே வேளையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் வலுவான டாலர் குறியீடுகளாலும், இந்திய பங்குச் சந்தை பலவீனமான போக்கை நோக்கி செல்கிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 241.30 புள்ளிகள் சரிந்து 77,378.91 புள்ளிகளில் நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில், அதிகபட்சமாக 77,919.70 புள்ளிகள் வரையிலும் சென்ற சென்செக்ஸ் பிறகு குறைந்தபட்சமாக 77,099.55 புள்ளிகள் வரையிலும் பயணித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் சரிந்து 23,431.50 புள்ளிகளாக முடிந்தது.
இதையும் படிக்க: பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ப்ளூ சிப் பங்குகளான இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், அதானி போர்ட்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை பங்குகள் சரிந்தும் முடிந்தது. அதே வேளையில் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்போசிஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 11.95 சதவிகிதம் உயர்ந்து ரூ.12,380 கோடியாக உள்ளது.
இந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தையும் மற்றும் நிஃப்டி 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அதே வேளையில், மும்பை பங்குச் சந்தை-யில் மிட்கேப் குறியீடுகள் 1.2 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடுகள் 2.4 சதவிகிதம் வரை சரிந்தது.
ஐடி துறை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் அதாவது மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியாலிட்டி, ஹெல்த்கேர், பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.7,170.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
ஐரோப்பிய சந்தைகள் சரிந்து முடிந்த நிலையில், ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவையும் சரிந்தது.
உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா 2.02 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 78.47 அமெரிக்க டாலராக உள்ளது.