செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும்: அண்ணாமலை

post image

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று மாலை, மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச் சுற்றி அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்திருந்தார். தமிழக அரசையும், சுரங்கம் அமைப்பது தொடர்பாக, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவிருக்கிறார். அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, மத்திய அமைச்சர் அறிவிக்கவிருக்கிறார்

விவசாயிகள் நலன் சார்ந்தே பிரதமர் மோடி எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதி நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காவல்துறையின் தடையை மீறி நரசிங்கம்பட்டி பெருமாள்மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கி.மீ. தூரம் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது.அகில இந்திய காங்கிரஸுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்க... மேலும் பார்க்க

பொங்கல்- புதுச்சேரியில் ஜன.16, 17இல் அரசு விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஜன.16,17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்... மேலும் பார்க்க

சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்... மேலும் பார்க்க

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்- கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து ... மேலும் பார்க்க

சீமான் கருத்து - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப... மேலும் பார்க்க

தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டப்பேரவை விவாதத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப... மேலும் பார்க்க