ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்! 3 பேர் கைது!
வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் சாச்சர் மாவட்டத்தின் கட்டிகோரா பகுதியில் அசாம் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இன்று (ஜன.10) நடத்திய சோதனையில் பக்கத்து மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.1 கோடி மதிப்புள்ள 442 கிராம் அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன். அதனை கடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க:சத்தீஸ்கர்: குண்டு வெடிப்பில் ஒருவர் பலி! 3 பேர் படுகாயம்!
மேலும், இதேப்போல் அசாமின் கர்பி அங்லோங் மாவட்டத்தில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அண்டை மாநிலத்திலிருந்து வந்த வாகனத்தில் 9.11 கிலோ அளவிலான ஓப்பியம் மற்றும் 1,030 கிலோ அளவிலான மார்ஃபைன் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த போதை பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.